\
சென்னை: புறநகர் ரயில்களில் இன்று முதல் பெண்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்

சென்னை: புறநகர் ரயில்களில் இன்று முதல் பெண்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்

சென்னை: புறநகர் ரயில்களில் இன்று முதல் பெண்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்
Published on

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் மற்றும் சிறார்கள் நேரக்கட்டுப்பாடு இன்றி வழக்கம்போல் பயணிக்கலாம் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது.

சென்னையில் கொரோனா பரவல் தடுப்புக்காக நிறுத்தப்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கூட்டநெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் நேரக்கட்டுப்பாடு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டு பெண்கள் எந்த நேரத்திலும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவர்களுடன் 12 வயதுக்குட்பட்ட சிறார்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலிருந்து செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் செல்லும் ரயில், இன்று முதல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com