கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம்
Published on

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக மின்விநியோகம் தடைபட்டு இருந்து. தற்போது படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவ.,30 - டிச.,16 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்,  டிசம்பர் 18-ஆம் தேதி வரை தங்களது மின்கட்டணத்தை அபராதமின்றி செலுத்தி கொள்ளலாம் என ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com