பிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் வர இருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள புதுப்பாளையம் பிரிவில் பாஜக பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறடு. இதில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்காக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தேர்வு செய்யப்பட்டு, 40 அடி நீளத்திலும், 60 அடி சுற்றளவிலு மான பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து இறங்குவதற்காக, மைதானம் அருகே, 3 இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான மேடை, அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றப்பின், மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுமார் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com