புலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு

புலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு

புலிகளுக்கிடையே மோதல்: ஒன்றரை வயது புலி உயிரிழப்பு
Published on

(மாதிரிப்படம்)

தேனியில் இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்றரை வயது புலி உயிரிழந்தது.

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயம் பகுதிக்கு உட்பட்டது மேகமலை. இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்போது புலி ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த புலியினை பார்வையிட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்தப் பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்த புலி ஆண் என்றும் அதன் வயது ஒன்றரை வயது இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் மற்றொரு ஆண் புலியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த புலி தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் உயிரிழந்த புலி மனிதர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேதபரிசோதனை முடிந்த பின்னர் அதே இடத்தில் புலி எரியூட்டப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com