வயநாட்டில் வனத்துறையினரை தாக்கிய புலி

வயநாட்டில் வனத்துறையினரை தாக்கிய புலி
வயநாட்டில் வனத்துறையினரை தாக்கிய புலி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனத்துறை ஊழியர்களை தாக்கிய புலி கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள வனப்பகுதியில் கேரள வனத்துறை ஊழியர்க‌ள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென சாஜன் என்ற வனத்துறை ஊழியரை தாக்கியது. புலியை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மூவரும் தப்பியோடியபோது கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த சாஜனை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், வனத்துறையினரை தாக்கிய புலியை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி சுல்தான் பத்தேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, நேற்று மாலை கிளம்பி பகுதியில் புலி நடமாட்டமுள்ள இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். வனத்துறையினர் வைத்த அந்தக் கூண்டில் இன்று அதிகாலை 5 மணிக்கு புலி சிக்கியது. பிடிபட்ட அந்த ஆண் புலிக்கு 13 வயது இருக்கும் என்றும், பார்வை குறைபாடு இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட புலிக்கு தற்சமயம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சிகிச்சைக்கு பின், திருவனந்தபுரத்திலுள்ள உயிரியல் பூங்காவில் வைத்து அந்தப் புலியை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்திலுள்ள உயிரியல் பூங்காவில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com