\
திருப்பதியில் நாளை முதல் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவு

திருப்பதியில் நாளை முதல் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவு

திருப்பதியில் நாளை முதல் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் முன்பதிவு
Published on

ஜனவரி மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் 24-ஆம் தேதி காலை 9 மணி முதல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான சர்வதர்ஷன் டோக்கன்கள் 5 ஆயிரம் நேரடியாகவும், 5 ஆயிரம் ஆன்லைனிலும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் 25-ம் தேதி காலை 9 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com