\
பூனையை தூக்கிலிட்டு டிக்டாக்  - இளைஞரை சிறையில் அடைத்த நெல்லை போலீசார்

பூனையை தூக்கிலிட்டு டிக்டாக் - இளைஞரை சிறையில் அடைத்த நெல்லை போலீசார்

பூனையை தூக்கிலிட்டு டிக்டாக் - இளைஞரை சிறையில் அடைத்த நெல்லை போலீசார்
Published on

டிக்டாக்கில் பூனையை தூக்கிலிடும் வீடியோ எடுத்த நபரை நெல்லை போலீசார் கைது செய்தனர். 


நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிக் குளத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார்.  டிக்டாக் மீது அதிக மோகம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. அதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்ட தங்கதுரை, தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை தூக்கிலிட்டு அதனோடு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவருக்கு லைக்குகள் குவிய தொடங்கின. இதுகுறித்து நெல்லை மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பழவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கதுரையை, மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com