\
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை - மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சமூகப் பரவலாக இல்லை - மாவட்ட ஆட்சியர்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சமூகப் பரவல் இல்லை. 

மாவட்டத்தில் 15 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனை செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இதுவரை 1000 பேர் வந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பவதற்கு இம்மாதம் மூன்று ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளனர்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com