மாணவனை ஆற்றில் வீசி, மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி 

மாணவனை ஆற்றில் வீசி, மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி 

மாணவனை ஆற்றில் வீசி, மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி 
Published on

திருச்சி அருகே தோழியுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவனை, சிலர் கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி சமயபுரம் அருகே 5 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை தாக்கி ஆற்றில் தூக்கி வீசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆறு மணல் திட்டில் ஜீவித் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் அவரது தோழியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவரை தூக்கி ஆற்றில் வீசியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் அவர்கள் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து தப்பி வந்த மாணவி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து ஆற்றில் தூக்கிவீசப்பட்ட மாணவரை போலீசார் மீட்பு படையினர் உதவியுடன் ரப்பர் படகு மூலம் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com