திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்

திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்

திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்
Published on

கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழா நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளதை அடுத்து, இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்‌கள் கூடுவது வழக்கம். யானைகள் அணிவகுப்புக்கு தலைமை தாங்கும், பத்தரை அடி உயரம் கொண்ட தெச்சிகொட்டுகாவு ராம‌ச்சந்திரன் என்ற ‌யானைக்கு கடந்த ஆண்டு திருவிழாவின்போது மதம் பிடித்தது. யானை மிதித்துக் கொன்றதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை பங்கேற்கக் கூடாது என அரசு முட்டுக்கட்டை போட்டது. இதற்குப் பிற யானைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ராமச்சந்திரன் யானை மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஒரு மணி நேரம் மட்டும் ‌விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூரம் திருவிழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாளை முறைப்படி தொடங்கும் பூரம் திருவிழா, செவ்வாய்க்கிழமை அன்று மு‌டிவடைகிறது. திருவிழாவுக்காக திருச்சூர் முழுவதும் 3 ஆயிரத்து 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com