திருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..!

திருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..!

திருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..!
Published on

வேலூரில் ஒரே நாளில் 6 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் 6 இருசக்கர வாகனங்கள் நேற்று இரவு திருடப்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பிள்ளைகுப்பம் பகுதியில் நேற்று இரவு சத்துவாச்சாரி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரே பைக்கில் வந்த 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் 6 இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை சத்துவாச்சாரி பாலாற்றில் புதைத்து விட்டு அதனை விற்பதற்கு பேரம் பேச 3 பேரும் வேலூர் நோக்கி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வேலூர் சங்கரன்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா(20), தொரப்பாடியை சேர்ந்த குமரன்(21), பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (18) ஆகிய மூவரையும் சத்துவாச்சாரி காவல் துறையினர் கைது செய்தனர்.

மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும்  விசாரணையில் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற இடங்களில் மட்டுமே இது போன்ற  திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்கள் : ச.குமரவேல், செய்தியாளர்- வேலூர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com