\
விஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் மூன்று பேர் பலி

விஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் மூன்று பேர் பலி

விஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் மூன்று பேர் பலி
Published on

கோவை அருகே துப்புரவு பணியாளர்கள் மூன்று பேர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் துப்புரவு பணியாளர்கள் செப்டிக் டேங் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி  துப்புரவு பணியாளர்கள் மூன்று பேரும் உயிரிழந்தனர். ஒருவர் விஷவாயு தாக்கியதையடுத்து மீதமுள்ள 2 பேரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பணிபுரியும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனப் பலமுறை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், ஆங்காங்கே போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி பலியாவது வாடிக்கையாகி வருகிறது. 

அதேபோல பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் போதுமான விழிப்புணர்வு தொழிலாளர்கள் மத்தியில் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மனித உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com