மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு?

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு?

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் 3 பேர் உயிரிழப்பு?
Published on

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால், செயற்கை சுவாசம் தடைபட்டு மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, மதுரை அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மின்தடை ஏற்பட்டது. மின்தடை காரணமாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மல்லிகா, பழனியம்மா, ரவிசந்திரன் ஆகிய மூன்று பேருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. 

மருத்துவமனையின் ஜெனரேட்டர்களும் இயங்காததால், பிராண வாயு கிடைக்கபெறமால் இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீனிடம் கேட்டபோது, மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை என கூறப்படுவது உண்மையில்லை என்றார். உயிரிழந்த மூன்று பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com