ஒரே நேரத்தில் காவலர்களான மூன்று மகள்கள்! வைராக்கியத்தை வென்ற தாயுமான விவசாய தந்தை!

ஒரே நேரத்தில் காவலர்களான மூன்று மகள்கள்! வைராக்கியத்தை வென்ற தாயுமான விவசாய தந்தை!
ஒரே நேரத்தில் காவலர்களான மூன்று மகள்கள்! வைராக்கியத்தை வென்ற தாயுமான விவசாய தந்தை!

ராணிப்பேட்டையில் தாயை இழந்த மூன்று பெண் பிள்ளைகள் தொடர் தோல்விக்கு பின் காவலர் தேர்வில் வெற்றி கண்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கீழ்ஆவதாம் என்ர கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். 59 வயதான இவருக்கு, ப்ரீத்தி (27), வைஷ்ணவி (25), நிரஞ்சனி (22) மற்றும் கார்த்திகேயன் (20) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் தாயாரும் வெங்கடேசனின் மனைவியுமான சசிகலா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், வெங்கடேசன் தனது நான்கு பிள்ளைகளையும் அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளார். தொடர்ந்து கல்லூரி சேர்த்து, பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார்.

தொடர்ந்து தந்தை பராமரிப்பில் வளர்ந்த முதல் மகள் ப்ரீத்திக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவுடன் திருமணம் செய்துவைத்து, அடுத்த வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார். தனது சிறுவயது காவலர் கனவை பெண் பிள்ளைகளை காவலர்களாக கொண்டுவர பல கட்ட பயிற்சிகளை கொடுத்துள்ளார். பயிற்சி இருந்தும் காவலர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக காவலர் தேர்வில் கலந்து கொண்ட இரண்டு பெண் பிள்ளைகள் தொடர் தோல்வி அடைந்து வந்தனர்.

நடந்து முடிந்த காவலர்கள் தேர்வில் முதல் மகள் ப்ரீத்தி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் என மூன்று மகள்களையுமே தேர்வுக்கு தயார் படுத்தியுள்ளார் தந்தை வெங்கடேசன். இதற்காக தனது விவசாய நிலத்தில் கடுமையான பயிற்சிகளை அவர் கொடுத்த நிலையில், இந்த ஆண்டு தங்களது கடின உழைப்பால் இவர்கள் மூவரும் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். காவலர் பயிற்சியையும் நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி முடித்துள்ளனர். இந்த மகளின் உழைப்பை கண்டு, அக்கிராமமே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்கலாமே: கைகளில் தீச்சட்டி ஏந்தி போராடிய சுங்கச்சாவடி ஊழியர்கள்! தீர்வு எப்போது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com