குற்றால அருவியில் குளித்துவிட்டு ஊர் திரும்பிய போது சாலை விபத்துகள் - பெண் உட்பட 3 பேர் பலி

குற்றால அருவியில் குளித்துவிட்டு ஊர் திரும்பிய போது இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: டேவிட்

சென்னையை சேர்ந்த 9 நபர்கள் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு சொகுசு காரில் சென்றுள்ளனர். அப்போது, புளியங்குடி அடுத்துள்ள புன்னையாபுரம் பகுதி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆவடி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா (60) என்பவர் உயிரிழந்தார்.

Car accident
Car accidentpt desk

அதேபோல் புளியங்குடி அடுத்துள்ள நவாச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதிய விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (36), கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா (35) ஆகிய இருவரும் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tragedy
சென்னை: நீர்த்தேக்க தொட்டிக்குள் தவறி விழுந்த ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

குற்றால அருவில் குளித்துவிட்டு ஊர் திரும்பிய போது அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com