\
திருவண்ணாமலை: மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை: மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை: மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
Published on
திருவண்ணாமலை அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படும் மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆருத்திராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 8 வயதான தரணிதரன், 7 வயதான வினேஷ்வரன், 4 வயது சிறுவன் வீரன் ஆகியோர் ஏரியில் மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது. ஆழமான பகுதியில் இறங்கிய சிறுவர்கள் நீரில் மூழ்கியதை கண்ட மற்றொரு சிறுவன், அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஏரியில் தேடியபோது இரண்டு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஒரு சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com