வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறைபிடிப்பு

வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறைபிடிப்பு
வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறைபிடிப்பு

சென்னை வேளச்சேரியிலிருந்து தரமணி செல்லும் சாலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரை திமுகவினர் சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பணியாளர்கள் மூவர் இன்று மாலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்றிருக்கின்றனர். அவர்களை சிறைபிடித்ததால் பொதுமக்கள் இதுகுறித்துஅங்கு ஒரு மணிநேரமாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றியதோடு, அவர்கள் கொண்டுவந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது பயன்படுத்தப்படாததா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/JCBHgj-c1Pk" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

முதல்கட்ட விசாரணையில், அந்த இயந்திரங்கள் சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 11ஐ சேர்ந்த இயந்திரங்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com