\
தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்

தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்

தாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்
Published on

கோவையில் 4ஆம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மீனா எஸ்டேட் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவியை, சக மாணவர்கள் மூவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவியின் கண்ணில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். 

ஆனால் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாணவியின் தந்தை, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com