சட்டவிரோத மது விற்பனை: பாருக்கு சீல் வைத்த டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல்

சட்டவிரோத மது விற்பனை: பாருக்கு சீல் வைத்த டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல்
சட்டவிரோத மது விற்பனை: பாருக்கு சீல் வைத்த டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல்

அரசு அதிகாரிகள் வைத்த சீலை உடைத்து மது விற்பனை செய்ததை கண்டித்து டாஸ்மாக் மேலாளருக்கு மிரட்டல். இரு டாஸ்மாக் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் கடந்த ஒன்றாம் தேதி மூடி, 'சீல்' வைக்கப்பட்டன. ஆவடி, கோவர்த்தனகிரி நகர், பி.எச்.ரோடு பகுதியில், சசிகுமார் (48) மற்றும் திருமலைராஜபுரம், ரயில் நிலையம் எதிரில் கிருஷ்ணராஜ், (45) ஆகிய இருவரும், சீலை உடைத்து மது பானங்களை விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து தகவல் கிடைத்து, திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தர பண்டியன் நேரில் ஆய்வு செய்தார். பாரை திறந்து விற்பனையில் ஈடுபட்டவர்களை அவர் கண்டித்துள்ளார். இதனால் பாரில் இருந்தவர்கள் மேலாளரை மிரட்டியுள்ளனர். இது குறித்து, ஆவடி காவல் நிலையத்தில் சவுந்தர பாண்டியன் அளித்த புகார்படி, மிரட்டல் விடுத்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு போலீஸ் பாதுகாப்புடன் பாருக்கு மீண்டும் 'சீல்' வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள சசிகுமார் மற்றும் சுந்தரராஜனை ஆவடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான பாரை கண்டித்த அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com