\
பாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்

பாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்

பாத்திமா தற்கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில்... சென்னை ஐஐடி இயக்குநருக்கு வந்த மிரட்டல் கடிதம்
Published on

சென்னை ஐஐடி இயக்குநருக்கு‌ கொலை மிரட்டல் விடுத்து கடி‌தம் வந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா கடந்த 8-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஃபாத்திமாவின் தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் எனப் புகார் எழுந்தது. தமது செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை ஃபாத்திமா பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரைத் தற்கொலை செய்துகொள்ள தூண்டியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னை ஐஐடி இயக்குநருக்கு‌ கொலை மிரட்டல் விடுத்து கடி‌தம் வந்துள்ளது.

கடந்த 2ஆம் தேதி ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு வந்துள்ள கடிதத்தில், ஐஐடி மாணவி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் எழுதப்பட்டுள்‌ளது. 

இது குறித்து ஐஐடியின் பதிவாளர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடிதம் அனுப்பியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com