\
ஒன்றிய செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல்: திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

ஒன்றிய செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல்: திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

ஒன்றிய செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல்: திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
Published on

ஒன்றியச் செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பா.ஜ.க. ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவரை, கடந்த 8ஆம் தேதி திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன், செல்போனில் தொடர்புகொண்டு, தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து கேட்டதாக தெரிகிறது.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் உள்பட 10 பேர் பிரபுவின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு இருந்த, பிரபுவின் மனைவி செல்லம்மாளை அவர்கள், தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும், கணவர் - மனைவி இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து, செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கலிவரதன் உள்பட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com