தமிழகம் முழுவதும் வலுக்கும் CAA எதிர்ப்பு போராட்டங்கள் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் வலுக்கும் CAA எதிர்ப்பு போராட்டங்கள் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் வலுக்கும் CAA எதிர்ப்பு போராட்டங்கள் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Published on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் சார்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத் அமைப்புகள் மற்றும் கூட்டணி கட்சி தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை காந்தி அருங்காட்சியகம் முன்பு கண்களில் கருப்பு துணிகளை கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தலைநகரான தொடுபுழாவில் இஸ்லாம் ஜமாத் சார்பில் கண்டன பேரணி
  • அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மயிலாடுதுறை சின்னக் கடைத் தெருவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் அனும‌தியை மீறி ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ இஸ்லாமிய‌ அமைப்பின‌ர் ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்டோர் கைது.
  • திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம்.
  • புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, மெய்யநாதன் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் பங்கேற்பு.
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் பை பாஸ் சாலையில் முஸ்லிம் அமைப்பினர் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் என 300க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
  • திருப்பத்தூர் ஜின்னா ரோடு பகுதியில் அனைத்து ஜமாத் அமைப்புகள் மற்றும் கூட்டணி கட்சி தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
  • புதுச்சேரி அனைத்து ஜமாத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சுதேசி மில் அருகே நடைபெற்றது.
  •  நாகை அவுரி திடலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்ஆர்கே பகுதியிலிருந்து தாலுகா அலுவலகம் வரை ஜமாத் அமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்டன பேரணி நடத்தினர். பேரணியைத் தொடர்ந்து தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நல்லகண்ணு தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற்றது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com