நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதுவரை 1019 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்துவோர்கள் துப்பாக்கிகளை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த வகையில் சென்னையில் உரிமம் பெற்ற மொத்த துப்பாக்கிகள் வைத்திருக்கும் 2,700 பேரில், இதுவரை 1019 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் 750 துப்பாக்கிகள் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 900 துப்பாக்கிகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தேர்தல் விதிகளை மீறியதாக சென்னையில் அனைத்து கட்சிகள் மீதும் 53 வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும், பட்டினப்பாக்கத்தில் ரூ.5 லட்சமும், மயிலாப்பூரில் ரூ.3 லட்சம் என ரூ.8 லட்சம் சோதனையில் சிக்கியுள்ளதாகவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com