வத்தலகுண்டில் சுற்றித்திரியும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் - கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்

வத்தலகுண்டில் சுற்றித்திரியும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் - கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்

வத்தலகுண்டில் சுற்றித்திரியும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் - கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
Published on

வத்தலகுண்டில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் சுற்றுவதால் அப்பகுதி மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்தால் தமிழகத்தில் வௌவால்கள் இருக்கும் இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் தாண்டிக்குடி மலை பகுதியில் அதிகமான வௌவால்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றன. தற்போது வரை அந்த வௌவால்களை சாதாரண விலங்கு போல் பார்த்து வந்த பொது மக்கள் தற்போது தமிழகம், இமாச்சல பிரதேசம், புதுச்சேரி,கேரளா மாநிலங்களில் உள்ள வௌவால்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிடப் பட்டதிலிருந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வத்தலக்குண்டு மஞ்சள் ஆற்றுப்படுகை அருகே ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றன. இரவு நேரங்களில் ஊருக்குள் இரை தேட வரும் அந்த வௌவால்களை கண்டு பொதுமக்கள் மிரண்டு போயுள்ளனர். அப்பகுதியில் உள்ள வௌவால்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து அச்சத்தை போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com