தமிழ்நாடு
நகர் பகுதிகளில் மூடிய 1700 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி
நகர் பகுதிகளில் மூடிய 1700 டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி
நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடை நகர்புறங்களுக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக தெளிவான விளக்கம் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, நகர பகுதிகளில் மதுபானகடைகளை திறக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் விளக்கமளித்தது. விரிவான உத்தரவு ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் நகர்புறங்களில் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட சுமார் ஆயிரத்து 700 டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு அனுமதி கிடைத்துள்ளது.