\
தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழரின் எதிரிகள்: பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழரின் எதிரிகள்: பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின், தமிழரின் எதிரிகள்: பீட்டர் அல்போன்ஸ்
Published on: 

தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் தமிழரின் எதிரிகள் என தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டை கொங்கு நாடு என்ற பெயரில் இரண்டாக பிரிக்க மத்திய பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “கை,கால்,கழுத்து என அவயங்களுக்கு தனி பெயர் இருந்தாலும் அவைகள் உடலோடு இருந்தால்தான் உயிரோடு இயங்கமுடியும். கொங்குநாடு,செட்டிநாடு,வருஷநாடு,நாஞ்சில்நாடு,மறவர்நாடு,தென்பாண்டிநாடு என்பதெல்லாம் தமிழ்நாட்டின் அங்கங்கள்!அவற்றை பிரிக்க நினைப்பவர்கள் தமிழின்,தமிழனின்,தமிழ்நட்டின் எதிரிகள்” என தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com