அடக்கம் செய்ய பணமின்றி இறந்தவர்களின் உடல்களுடன் 7 நாட்கள் வசித்தவர்கள் மீட்பு

அடக்கம் செய்ய பணமின்றி இறந்தவர்களின் உடல்களுடன் 7 நாட்கள் வசித்தவர்கள் மீட்பு
அடக்கம் செய்ய பணமின்றி இறந்தவர்களின் உடல்களுடன் 7 நாட்கள் வசித்தவர்கள் மீட்பு

கோபிசெட்டிபாளையம் அருகே வறுமையின் காரணமாக இறந்தவர்களின் உடல்களுடன் 7 நாட்கள் வசித்து வந்த தாய், மகனை ஈரோட்டை சேர்ந்த தனியார் காப்பகத்தினர் மீட்டுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி கனகாம்பாள் (80). இவருடைய மகள் சாந்திக்கு (60), திருமணமான பின்பு அவரது கணவர் மோகனசுந்தரம், மகன் சரவணக்குமார் (34), மகள் சசிரேகா ஆகியோருடன் தனது தாயார் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சாந்தியின் வீட்டிருக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது சாந்தியின கணவர் மோகனசுந்தரம், அம்மா கனகாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் சடலங்கலாக கிடந்துள்ளனர்.

இது குறித்து சாந்தியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பணம் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆகவே அதனை தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்தனர். இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தனியார் காப்பகத்தினர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு கல்லூரி மருத்துவனைக்கும், தாய் சாந்தியை மீட்டு ஈரோட்டில் செயல்பட்டுவரும் தனியார் காப்பகத்திற்கும் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள் மற்றம் காவல்துறையினர் முன்னிலையில் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக வறுமையில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யமுடியாமல் 7 நாட்கள் இறந்தவர்களுடன் இருந்துவந்த செய்திகள் செய்திதாள்களிலும், ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தததையொட்டி அப்பகுதி பொதுமக்கள் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com