\
நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
Published on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாசலத்துக்கு கடந்த தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு அளிக்கவில்லை. எனினும் அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இதனிடையே மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் தோப்பு வெங்கடாசலம் நாளை காலை 10.30 மணியளவில் திமுகவில் இணைய உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com