தூத்துக்குடி: அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

தூத்துக்குடி: அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

தூத்துக்குடி: அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை
Published on

ஓட்டப்பிடாரம் அருகே அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தென்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மணியாச்சி டிஎஸ்பி சங்கர் புளியம்பட்டி ஆய்வாளர் தர்மர் தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையா தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com