தமிழ்நாடு
தூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி தமிழரசன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்களுக்கு நீதிமன்ற உத்தரவையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி 5 உடல்கள் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆறாவதாக தமிழரசன் என்பவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இன்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை சொந்த ஊர் கொண்டுச்செல்லப்பட்டு அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.