தூத்துக்குடி: பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி மூன்றே நாள்களில் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில், தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவர், அங்குள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் திருவிக நகரைச் சேர்ந்த கார்த்திகா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட மாரி செல்வம் - கார்த்திகா தம்பதி
கொலை செய்யப்பட்ட மாரி செல்வம் - கார்த்திகா தம்பதிpt desk

திருமணம் நடந்த அன்றேவும், கார்த்திகாவின் உறவினர்கள், மாரி செல்வத்திடம் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று தம்பதியர் வசித்து வந்த வீட்டுக்குச் சென்ற இனங்காண இயலா கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை
தூத்துக்குடியில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை

தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

police
policept desk

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com