\
தூத்துக்குடி: 1330 குறள்களை 32 நிமிடங்களில் ஒப்பித்து சாதனை - பள்ளி மாணவனுக்கு பாராட்டு

தூத்துக்குடி: 1330 குறள்களை 32 நிமிடங்களில் ஒப்பித்து சாதனை - பள்ளி மாணவனுக்கு பாராட்டு

தூத்துக்குடி: 1330 குறள்களை 32 நிமிடங்களில் ஒப்பித்து சாதனை - பள்ளி மாணவனுக்கு பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் திருக்குறள் சொல்வதில் உலக சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரசாத், சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 32 நிமிடத்தில் 1330 திருக்குறள்களை ஒப்பித்து உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த மாணவனின் சாதனையை பாராட்டும் வகையில் தமிழ் இலக்கிய மன்ற விழா பள்ளி வாளகத்தில் நடைபெற்றது. இதில், உலக சாதனை படைத்த மாணவர் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள்களை சொல்லி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில் மாணவரின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com