\
தூத்துக்குடி: 36 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து

தூத்துக்குடி: 36 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து

தூத்துக்குடி: 36 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து
Published on

உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்தை காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் (34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டோல்கேட் பகுதியை இரவு 10:20 மணி அளவில் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அப்போது மின் கசிவு காரணமாக பேருந்தில் இருந்து தீப்பொறி வந்துள்ளது. இதையடுத்து டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பார்த்துள்ளார். அப்போது தீ மளமளவென பரவத் தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதையடுத்து தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்புக்கூடுபோல காட்சியளித்தது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறை அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com