'பதவிக்காக காங்கிரஸோடு விசிக கைகோர்த்ததா...?' - திருமாவளவன் விளக்கம்!

'பதவிக்காக காங்கிரஸோடு விசிக கைகோர்த்ததா...?' - திருமாவளவன் விளக்கம்!
'பதவிக்காக காங்கிரஸோடு விசிக கைகோர்த்ததா...?' - திருமாவளவன் விளக்கம்!

“காங்கிரஸ் கட்சியுடன் விசிக பதவிக்காக கைகோர்த்து விட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது நாட்டின் மிக முக்கிய பிரச்னையாக இருக்கும் சனாதனத்தையும், இந்துத்துவாவையும் எதிர்ப்பதற்காகத்தான் காங்கிரஸ் கட்சியோடு கைகோர்க்க வேண்டிய சூழல் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சியொன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையில், 

''நாட்டின் மிகப்பெரிய முதன்மையான பிரச்சனையாக இருப்பவர்கள் பாஜக, சங்பரிவார்தான். அவர்களின் இந்துத்துவா கொள்கை நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து பயணிக்கிறேன். பதவிக்காக நான் ஒன்றும் அவர்களோடு சேரவில்லை.

தொழிலாளிகள் நசுக்கப்படும்போது முதலாளிகளை எதிர்க்க வேண்டும். பன்னாட்டு முதலாளிகள் வரும்போது, நம் நாட்டின் பெரும் முதலாளிகளை ஆதரிக்க வேண்டும். அதற்காக அவர்களோடு ஒத்துப்போவது கிடையாது. நம் வளத்தை சுரண்டி வெளி நாட்டுக்கு கொடுக்கும் பொது நம் நாட்டின் முதலாளிகளை எதிர்க்க‌த்தான் வேண்டும். அதுபோல தான் தற்போது நாட்டின் முதன்மையான பிரச்னை, பார்ப்பனிய இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதாக இருக்கிறது. அதற்காகவே காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து பயணிக்கிறேன்.

முஸ்லிம், இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியதால்தான் காந்தியடிகள் கோட்சேவால் சுட்டுக் கொள்ளப்பட்டார். தற்போது பாஜக கொள்கையாக இருக்கும் ஒரே தேசம், ஒரே கலாசாரம் போன்ற கருத்துக்கள் ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே மாதம் என்ற சாவர்க்கரின் கொள்கைகளாகும். இந்துத்துவா என்பது சாவர்க்கர் காலத்தில் இருந்து உருபெற்று வந்துள்ளது. ஆகவே இந்த இந்துத்துவா பற்றி அறிந்து கொள்ள நாதுராம் கோட்சேவின் வாழ்க்கையை படித்து தெளிய வேண்டியது அவசியம்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com