\
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழலுக்கு சாட்டையடி... தொல்.திருமாவளவன்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழலுக்கு சாட்டையடி... தொல்.திருமாவளவன்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழலுக்கு சாட்டையடி... தொல்.திருமாவளவன்
Published on

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஊழலுக்கு விதித்த சாட்டையடி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஊழலுக்கு விதித்த சாட்டையடி என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பேரவையை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள தொல்.திருமாவளவன், காலம் தாழ்த்துவதால் குழப்பம், அசாதாரண சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com