\
"சிஏஏ-வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது" - திருமாவளவன்

"சிஏஏ-வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது" - திருமாவளவன்

"சிஏஏ-வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது" - திருமாவளவன்
Published on

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், ''தேசத்திற்கு விரோதமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, அரசியலமைப்புக்கு விரோதமான சட்டத்தை ஆதரித்து நிறைவேற்றுவதற்கு துணைபோனவர்கள் அதிமுகவும் பாமகவும் என்பது வரலாற்றின் கருப்புப்புள்ளி.

இந்த நிலையில் அரசியலமைப்புக்கு எதிரான சிஏஏ சட்டத்தை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை திமுக நிறைவேற்றியிருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com