\
அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்

அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்

அதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்
Published on

அதிமுக பலவீனமடைவது தமிழக நலனுக்கு உகந்ததில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிடக் கூடாது. அதிமுக பலவீனமடைவது தமிழக நலனுக்கு உகந்ததல்ல. தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவது, சாதிய, மதவாத சக்திகள் தலைதூக்க இடமளிக்கும்.

இரட்டை இலையை மீட்க அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவது பதவிக்காகவா, தமிழகத்திற்காகவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக போய்விடக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com