உத்திரமேரூர் பணிமனைக்கு தொடர்ந்து 4-வது முறையாக சிறந்த கிளை மேலாளருக்கான விருது 

உத்திரமேரூர் பணிமனைக்கு தொடர்ந்து 4-வது முறையாக சிறந்த கிளை மேலாளருக்கான விருது 

உத்திரமேரூர் பணிமனைக்கு தொடர்ந்து 4-வது முறையாக சிறந்த கிளை மேலாளருக்கான விருது 
Published on
அரசு போக்குவரத்துக் கழகம் உத்திரமேரூர் பணிமனைக்கு, தொடர்ந்து நான்காவது முறையாக சிறந்த கிளை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோட்டம், அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலத்தில், 10 பணிமனைகளில் முறையான பேருந்து பராமரிப்பு, டீசல் சிக்கனம், அதிக வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஒரு பணிமனையை தேர்வு செய்து சிறந்த கிளை மேலாளருக்கான விருது வழங்கப்படுகிறது. அதன்படி  விழுப்புரம் கோட்டம் மேலாண் இயக்குநர் பொன்முடி, உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் எம்.கருணாகரனுக்கு சிறந்த பணிமனை கிளை மேலாளருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஏற்கெனவே உத்திரமேரூர் பணிமனைக்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தல் அன்று, தமிழகத்திலேயே, 130 சதவீதம் அரசு பேருந்துகளை இயக்கியதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த, 2019ல், 365 நாட்களும் அனைத்து பேருந்துகளையும் இயக்கியதற்காக ‘பணித்திறன் நற்சான்றிதழ்’ வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்குக்குபின், எந்த பணிமனையிலும் இல்லாத வகையில், 111 சதவீத அரசு பேருந்துகளை இயக்கியதற்காக விருது வழங்கப்பட்டது.
தற்போது, டீசல் சிக்கனம், பஸ் டயர்களின் ஆயுள் நீட்டிப்பு, கடந்த சட்டசபை தேர்தல் அன்று, பணினையில் உள்ள 100 சதவீதம் ஊழியர்களும் ஓட்டு போட்டதோடு, 135.8 சதவீதம் பேருந்துகளை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக நான்காவது முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com