அரியலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் இதுதான்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தில் தீபம் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை இயங்கி வருகின்றது. இதனை ராஜேந்திரன், மருகன், அருண்குமார் அகியோர் நடத்தி வருகின்றார். இந்நிலையில். இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடி மளமளவென வெடிக்கத் தொடங்கிய நிலையில், வெடிகள் சுமார் 3 மணி நேரம் வெடித்துச் சிதறியது. .இதில் ஆலை முழுவதும் சேதமடைந்தது.
இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும் , படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாணமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து அரியலூரில் சிகிச்சை பெற்றுவரும் 5 பேரை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் 50 ஆயிரம் நிவாரண தொகைக்கான காசோலைகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து அரியலூரில் உள்ள 10 பிரேதங்களில், 9 பிரேதங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த அந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரன் ஆலையை நடத்தி வந்த அவரது மருமகன் அருண்குமார் ஆகியோர் மீது விபத்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், ஆபத்தான வெடி பொருட்களை வைத்து இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த நான்கு மாதங்களாக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், புதிதாக அதே ஊரைச் சேர்ந்த 3 பெண்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வேகமாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என தெரியாமல் அமோனியம் பாஸ்பேட் இருந்த பொட்டியை இழுத்துள்ளனர். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அங்கு வேலை செய்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ்வரனும் உறதி செய்துள்ளார். மேலும் இங்கு பாதுகாப்பு இல்லாமல் குப்பை போல வெடி மருந்துகளை போட்டு வைத்திருந்ததும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.