மருந்துப் பாட்டிலை தவறவிட்ட மூதாட்டி: காவலர் வைத்த கோரிக்கை; கைகொடுத்த பைக் பயணி
மூதாட்டி ஒருவர் தவறவிட்ட மருந்துப் பாட்டிலை காவலர் ஒருவர், மோட்டார் சைக்கிள் பயணியை வைத்து கொண்டு சேர்த்த வீடியோ சமூகவலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.
தமிழ்நாடு தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த காவலர் ஒருவர், அவரிடம் கர்நாடகாவா என்று கேட்க அதற்கு பதிலளித்த பயணி ஆம் என்று கூறியுள்ளார். உடனே கையில் இருந்து மருந்துப் பாட்டில் ஒன்றை எடுத்த காவலர், முன்னால் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர் இந்த பாட்டிலை தவறவிட்டு சென்றுவிட்டார் என்றும் அந்த பேருந்தை இடைமறித்து இந்த பாட்டிலை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்றும் அவரிடம் கூறியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட அந்தப் பயணி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று பேருந்தை இடைமறித்து அந்த மருந்துப் பாட்டிலை மூதாட்டியிடம் ஒப்படைத்தார். இந்த முழு நிகழ்வும் AnnyArun என்ற யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை கண்டுள்ளனர்.