தமிழ்நாடு
திருவாரூர்: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவாரூர்: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (39). கொத்தனார் வேலை பார்க்கும் இவர், முத்துப்பேட்டையில் வேலையை முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மருதவனம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மருதவனம் நடுத்தெருவை சேர்ந்த திருவேங்கடநாதன் (24) பைக் மீது நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.