பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்pt desk

திருவாரூர் | மின் மோட்டாரை இயக்கிய பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

மன்னார்குடி அருகே மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Published on

செய்தியாளர்: C.விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் - மீனா, தம்பதியர். இவர்களது 12 வயது மகள் அனுஷ்கா, 8ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் இன்று காலை வீட்டில் இருந்த மாணவி அனுஷ்கா வீட்டின் பின்புறம் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்ச்சை போட்டுள்ளார்.

போது எதிர்பாராத விதமாக அனுஷ்கா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அநத மாணவியின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி அனுஷ்கா உயிரிழந்தார்.

பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
நெல்லை | கார்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் பலி

இந்த விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com