திரூவாரூர் - கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவரொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழப்புபுதிய தலைமுறை

திருவாரூரில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மோனிஷா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மோனிஷா
மாணவி மோனிஷா

திருவாரூர் மாவட்டம் அதம்பார் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜசேகர் மற்றும் சரண்யா தம்பதி. இவர்களின் மகள் மோனிஷா. இவர் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அப்பகுதியில் கனமழை பெய்ததில், சிறுமி வசித்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சிறுமி சுவர் ஓரத்தில் உறங்கி வந்ததால் பலத்த காயத்திற்கு உள்ளார். மேலும் அவரது 6 ஆம் வகுப்பு படிக்கும் சகோதரருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

சிறுமி உயிரிழப்பு
வேதாரண்யம்: மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய அரியவகை ஆலம் பூச்சி இறால்

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது சிறுமியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த சிறுமியின் சகோதரர் நன்னிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com