அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
திருவாரூரில் மணலகரம் என்ற இடத்தில் விவசாயி கலியப்பெருமாள் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. டெல்டா பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கபட்டதை அடுத்து டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. மணலகரம் என்ற இடத்தில் தனது வயலில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த விவசாயி கலியப்பெருமாள் சென்றுள்ளார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த அவர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது