\
சுகாதாரச் சீர்கேடு: திருவாரூரில் ரூ.7லட்சம் அபராதம்; 2,165 பேருக்கு நோட்‌டீஸ்

சுகாதாரச் சீர்கேடு: திருவாரூரில் ரூ.7லட்சம் அபராதம்; 2,165 பேருக்கு நோட்‌டீஸ்

சுகாதாரச் சீர்கேடு: திருவாரூரில் ரூ.7லட்சம் அபராதம்; 2,165 பேருக்கு நோட்‌டீஸ்
Published on

டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக திருவாரூரில் உள்ள ஜஸ்கிரீம் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

திருவாரூர் நகரின் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அப்போது திருவாரூர் தெற்கு வீதி பகுதியில் உள்ள ஜஸ்கிரீம் நிறுவனத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ள தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு இருப்பதை கண்டறிந்து ஆட்சியர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.7,21,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக கூறி 2,165 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com