திருவாரூர்: தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: தாய் சேய் நலப்பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Published on
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
70 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 அறுவை சிகிச்சை பிரிவுகள், 250 படுக்கை வசதிகளையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், அவர்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார். மேலும், காட்டூர் கிராம மக்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட பணிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com