இன்ஸ்டாகிராம் மோகம்: அரசு பேருந்தை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்! #ShockingVideo

திருவண்ணாமலையில் முக்கிய சாலை நடுவில் போக்குவரத்தை நிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக இளைஞர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் முக்கிய சாலையின் நடுவே ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிக அளவு புகை வரும்படி ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். போக்குவரத்தை நிறுத்தி பயணிகளுக்கு இடைஞ்சல் செய்தவாறு இச்செயலை செய்த அவர், நண்பர்களை வைத்து இதை வீடியோவும் எடுத்து உள்ளார்.

அரசு பேருந்தை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்
அரசு பேருந்தை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்புதிய தலைமுறை

அரசு பேருந்தை மறித்து இதை ரீல்ஸ் எடுத்த அந்த இளைஞர், இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக இதை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. அவரின் இச்செயலால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்தனர். முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த சம்பந்தப்பட்ட இளைஞர் மீது, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com