\
திருமாவளவன் சாமி தரிசனம்
திருமாவளவன் சாமி தரிசனம்pt desk

திருவண்ணாமலை | அண்ணாமலையார் திருக்கோயிலில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார்.
Published on

செய்தியாளர்: மா மகேஷ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

திருமாவளவன் சாமி தரிசனம்
கும்பகோணம் | நாகேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியசைந்து வந்த தேர்

முன்னதாக திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அவர், தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்ததோடு அசாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, திருமாவளவன் உடன் பள்ளிக் குழந்தைகள் பொதுமக்கள் அனைவரும் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com