தமிழ்நாடு
மாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்
மாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்
2ஆம் வகுப்பு மாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியரைக் கண்டித்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் திஸ்வராம். இவர் பள்ளிக்கு வழக்கமாக அணிந்து செல்லக்கூடிய ஷூ-வை அணியவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை இரும்பு ஸ்கேலால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனை அடித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.