\
‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்!

‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்!

‘தள்ளு தள்ளே’ போலீஸாருடன் மோதிய அரசு ஊழியர்கள்!
Published on

திருவண்ணாமலை ஆட்சியர் காரை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீஸாரிடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் அவரது செயலர் ஜானகி ஆகியோர் ஊழிய‌ர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாகக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது அலுவலகத்திற்கு வந்த ஆட்சியரின் காரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டு தடுத்தனர். அதையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரிலிருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்றார். பின்னர் ஆட்சியரை பின் தொடர்ந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தள்ளு முள்ளு உச்சத்தை எட்ட, இருதரப்பினரும் ‘நீங்களா நாங்களா’ பார்த்து விடுவோம் என்ற அளவுக்கு சாலை தடுப்புகளை தள்ளிக்கொண்டனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com